ஐநாவும் இனர் சிற்றி (Inner City) ஊடகத்தின் மத்தியூ லீயும் – ந.மாலதி

“கடற்கரையில் இரத்த ஆறு ஓடுவதை ஐநா தடுக்காததையும், ஐநாவினது சமாதான படையின் ஆலோசகராக சவேந்திரசில்வாவை ஏற்றதையும் இனர் சிற்றி ஊடகம் கேள்விக்குள்ளாக்கிய பின்னர் இனர்சிற்றி ஊடகம் ஐநாவில் தடை செய்யப்பட்டது.” – மத்தியூ லீ

ஐநா வளாகத்தில் ஊடகவியலாளராக பணி செய்வதற்கு ஒரு விசேட அனுமதி பெறவேண்டும். இதை ஒரு காலத்தில் மத்தியூ லீ என்ற ஒரு ஊடகவியலாளர்பெற்றிருந்தார்.2008-09 காலப்பகுதியில் அக்காலத்தில் இலங்கையில் இடம்பெற்றமனித உரிமை மீறல்களையும் போர் குற்றங்களையும், ஐநா அவற்றை உதாசீனம் செய்தததையும் அவர் தொடர்ச்சியாக தனது இனர் சிற்றி ஊடகம் என்ற செய்திதளத்தில் பதிந்து வந்தார்.

இதனால் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் அன்று அவர்பிரபலமானார்.மத்தியூ லீ ஈழத்தமிழர் சார்ந்த ஐநாவின் நடத்தையை மட்டுமல்லாமல் உலகின்பல்வேறு இடங்களில் இடம் பெறும் கொடுமைகளையும் அது சார்ந்த ஐநாவின்மோசமான நடத்தைகளையும் பதிந்து வருகிறார்.NY0417 05 ஐநாவும் இனர் சிற்றி (Inner City) ஊடகத்தின் மத்தியூ லீயும் - ந.மாலதி

இதற்காக ஐநாவின்ஊடகவியலாளருக்கான அவருடைய விசேட அனுமதி பல முறை தடை செய்யப்பட்டுவருகிறது.இன்றும் சிறிலங்கா பற்றிய தனது பதிவுகளில், “கடற்கரையில் இரத்த ஆறு ஓடுவதை ஐநா தடுக்காததையும், ஐநாவினது சமாதான படையின் ஆலோசகராக சவேந்திரசில்வாவை ஏற்றதையும் இனர் சிற்றி ஊடகம் கேள்விக்குள்ளாக்கிய பின்னர் இனர்சிற்றி ஊடகம் ஐநாவில் தடை செய்யப்பட்டது.” என்று பதிவிடுகிறார்.

கடந்த வருடமும் அவர் அவ்வாறு கடுமையாக வெளியேற்றப்பட்டதை பல மேற்குலக ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டன. ஐநாவின் சமாதான படைகள் சார்ந்த ஒரு அந்தரங்க கூட்டத்தின் போது அவர் வெளியே காத்துகொண்டு நின்ற போது அவருடைய உடைகள் கிழியும் அளவுக்கு அவர் வன்முறையூடாக வெளியேற்றப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.IMG 3499 800x542 ஐநாவும் இனர் சிற்றி (Inner City) ஊடகத்தின் மத்தியூ லீயும் - ந.மாலதி

“நான் ஒரு ஊடகவியாலாளர். இங்கு நின்று இக்கூட்டத்தை பற்றி செய்தி வெளியிடஎனக்கு தகுதி உண்டு. இங்கு என்ன நடக்கிறது பாருங்கள்…” என்று அச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவர் உரக்க பேசுகிறார்.“கவனமாக அடுக்கப்பட்ட ராஜதந்திர கண்ணாடி கடையில் மத்தியூ லீ ஒரு யானைபோல…” என்று 2007இல் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை இவரை விபரித்தது.

“இவர் பல ஐநா சார்ந்த செய்திகளை வெளியிட்டு பல மூத்த ஐநா அதிகாரிகளைஆத்திரம் அடைய செய்திருக்கிறார். பல கிசுகிசு கதைகளையும் வெளியிட்டிருக்கிறார்.ஐநா இவற்றை பொய்கள் என்று சொல்லியிருக்கிறது” என்று அதே பத்திரிகைசொன்னது.

“ஐநாவுக்கு மத்தியூ லீ ஒரு முள்ளுப்போல” என்று வேறு ஒரு ஊடகம் செய்திவெளியிட்டது.நியூயோர்கர் என்ற பத்திரிகை 2011 இல், “சில சமயம் தனது தளத்தில் மத்தியூ லீவெளியிட்ட செய்திகள் உலகில் தாக்கம் செலுத்தியிருக்கிறது” என்று சொன்னது.

இதுபோலத்தான் 2008-09 காலப்பகுதியில் இலங்கை சார்ந்த ஐநா செயற்பாடுகள்பற்றி மத்தியூ லீ வெளியிட்ட செய்திகளே பின்னர் ஐநா அக்காலத்தில் இலங்கை போர்சார்ந்து விட்ட பிழைகளை தாமே அறிக்கையாக வெளியிட வேண்டிய நிலமையைஏற்படுத்தியது. இதுவே ஐநாவின் பெற்ரி அறிக்கையாக பின்னர் வந்துபிரபலமடைந்தது.

பல தடவைகள் ஐநா இவ்வாறு உலகின் வெவ்வேறு இடங்களில் தவறுகள் செய்யவும்பின்னர் தவறுகளை தாமே ஏற்றுக்கொள்ளும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான்இருக்கிறது. எமது தாயகத்தில் தாம் விட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டு ஐநா ஒருஅறிக்கை விட்டதும் இது மாரியானது தான்.

ஆனால் ஐநாவின் தவறுகளும் மீண்டும்மீண்டும் நடக்கத்தான் செய்கின்றன.மத்தியூ லீ மேல் ஐநா இழைத்த துன்புறுத்தல்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு என்றும் சில அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன. ஐநாவில் உள்ள பல ஊழல்கள் பற்றிதான் விசாரணை செய்து வருவதாலேயே தான் வெளியேற்றப்பட்டதாக மத்தியூ லீசெய்தியாளர்களுக்கு சொல்லியிருக்கிறார்.

“ஐநா முன்னர் விட இப்போது மோசமாகி விட்டது. யூலாய் 5ம் திகதியிலிருந்து நான்ஐநா வளாகத்திற்கு போவதும் கேள்விகள் கேட்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.”என்று இவர் சொல்கிறார்.

செப்டம்பர் 26ம் திகதி சிறிலங்காவைப் பற்றி அவர் பதிவிட்ட செய்தியில், “இதேசவேந்திர சில்வா சிறிலங்கா படையின் உயர் அதிகாரியாக அண்மையில்நியமிக்கப்பட்டார். இந்த ஐநா அமைப்பு எத்துணை ஊழலானதாக இருந்தால் போர்குற்றவாளியான சவேந்திர சில்வாவின் படையில் உள்ள பராக்கிரம சிறிவர்தனாவை ஐநா சமாதான படையில் தொடர்ந்தும் வைத்திருக்கும். இந்த பராக்கிரம சிறிவர்தனா மடு தேவாலயத்தில் தமிழர்களை கொலை செய்தவர் என்று குற்றம்சாட்டப்படுகிறார்.”