Tamil News
Home செய்திகள் ஐதேக வே தமிழருக்கெதிரான இனக்கலவரங்களுக்கு காரணம்;பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் அவர்களே –...

ஐதேக வே தமிழருக்கெதிரான இனக்கலவரங்களுக்கு காரணம்;பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் அவர்களே – வாசுதேவ

யார் இனவாதிகள், யார் இன, மத கலவரங்களை கையில் எடுத்தது”  என எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயகார எம்.பிக்கும்  அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட  ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் வாசுதேவ நாணயக்கார ஐக்கிய தேசியக் கடசியின் இனவாதச் செயற்பாடுகளை குறிப்பிட்டுப் பேசினார்,

ஐக்கிய தேசிய கட்சி 1958இலும் அதேபோல் 1983 ஆம் ஆண்டிலும் கலவரங்களை செய்து இனவாத மதவாத குழப்பங்களை ஏற்படுத்தும் தலைவர்களை கொண்ட கட்சி.

இந்த குற்றத்தை எமது பக்கம் சுமத்த முயற்சிப்பதென்றால் அதனை ஆதரங்களுடன் கூற வேண்டும். எமது பக்கம் இனவாதம் பரப்பும் தலைவர்கள் இல்லை. பண்டா -செல்வநாயகம் உடன்படிக்கைக்கு எதிராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன செயற்பட்டதை நீங்கள் மறந்திருக்க முடியும்.

1983 ஆம் ஆண்டு சிறில் மேத்திவ் வீதியில் இறங்கி தமிழ் மக்களுக்கு எதிராக கலவரம் செய்ததை நீங்கள் மறந்திருக்க முடியும். இதெல்லாம் நீங்கள் மறந்திருக்க முடியும். ஆனால் எமக்கு இனவாத மதவாத பிளவுகள் தேவையில்லை.

வேலை செய்யும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். பண்டாரநயாக செல்வநாயகம் உடன்படிக்கையை அன்று எதிர்த்ததே ஐக்கிய தேசிய கட்சி தான் . ஆதரங்களுடன் நாம் கூறுகின்றோம், ஆனால் ஆதாரம் இல்லாத கருத்துக்களை நீங்கள் கூறுகின்றீர்கள் என்றார்.

பண்டா-செல்வா ஒப்பந்தத்தை குழப்பியதும் 83 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை கையில் எடுத்ததும் யார் என்பதை மறந்துவிட வேண்டாம் என சபையில் சாடினார் வாசுதேவ எம்.பி.

 

Exit mobile version