ஏழுபேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் – கனிமொழி, மு.க.ஸ்டாலின்

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைதாகி சிறையிலுள்ள 7 தமிழர்கள் தொடர்பாக தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7பேரும் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் விடுதலை தொடர்பான மனு  இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருந்தது.

இது தொடர்பாக திமுக மக்களவை உறுப்பினரான கனிமொழி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ருவிற்றர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனிதநேயமற்ற அதிகார அத்துமீறல். பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாடு வேடிக்கை பார்த்திராது வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.