Tamil News
Home செய்திகள் ஏப்ரலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது – ரணில்

ஏப்ரலில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது – ரணில்

மாகாணசபைத் தேர்தலை ஏப்ரலில் நடத்த அலரி மாளிகையில் பஸில் ராஜபக்r ஏற்பாடுகளை செய்து வருகின்றார். மறுபுறம் பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை ஆளும் கட்சி ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை தலைவரை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் –

“மாகாண சபைத் தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடதத்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. கடந்த மற்றும் இவ்வாரம் முழுவதிலும் பஸில் ராஜபக்r அலரி மாளிகையில் இதற்கென பல்வேறு சந்திப்புகளை முன்னெடுத்துள்ளார். இந்தச் சந்திப்புகளில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் என பல சந்தர்ப்பங்களில் கலந்துக்கொண்டுள்ளனர்.

பழைய முறைமையில் மகாண சபை தேர்தலை நடத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை ஜனவரியில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி சமர்பிக்கவுள்ளது. மாகாண சபை தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடத்து வதற்கான ஏற்பாடுகளே அரசாங்கத்திடம் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காணப்படுவதுடன் மே மாதத்தில் வெசக் நிகழ்வுகள் இடம்பெறும். எனவே இந்த இரு நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டுள்ள அரசாங்கம் பெரும்பாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவற்கான வாய்ப்புகளே உள்ளன.

எனவே தேர்தலுக்கு தயாராக வேண்டும். கட்சி மறுசீரமைப்புப் பணிகளை விரைவு செய்து வலுவாக செயற்பட வேண்டும். மக்கள் ஆளும் கட்சியில் குறுகிய காலத்தில் வெறுப்பை கொண்டுள்ளனர். எதிர்பார்த்தளவு எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளும் அமையவில்லை. எனவே ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் தலைத்தூக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தல் வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version