ஏன் தமிழர்கள் பொருளாதார தன்னிறைவு அடையவேண்டும்?

ஒரு இந்திய தொழிலதிபர் தன் 25ஆம் திருமண நாளிற்கு மனைவிக்கு 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) காரை பரிசளித்ததாக நாளிதழ் செய்தி வெளிவந்திருந்தது, இவர் யார் என்று ஆராயும் போது துபையில் கேரளாவை சேர்ந்த பெரும் தொழிலதிபர் என்பது தெரிந்தது.

தமிழக அரசு தடை செய்த DAM 999 என்கிற படத்தை முல்லைப்பெரியாறு ஆணை உடையும் என்று பீதியை கிளப்பும் படத்தை எடுத்ததுடன், தடைசெய்யப்பட்ட இந்த படத்திற்கு 23 சர்வதே விருதுகள் வாங்கிருக்கிறார் இவர் வேறு என்ன எல்லாம் பணவசதிதான்.

ஆங்கில அரசு செய்யமுடியாது என்ற முல்லைப்பெரியாறு திட்டத்தை இங்கிலாந்தில் தன் சொத்தை விற்று தமிழக பாசனத்திற்கு பென்னி குக் அவர்களால் கட்டப்பட்டது, இந்த இனத்திற்கு எந்த தொடர்பும் இல்லாத நபர் தமிழ் இனத்திற்கு செய்த உன்னத செயல், பங்காளிகளான மலையாளிகள் நாம் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை நுகர்வத்தில் இருந்து, தங்க நகை விற்பனை முதல் அடகு பிடிப்பது வரை செய்து வருமானம் ஈட்டுபவர்கள் நம்மை விழ்த்துவதில் குறியாக இருப்பது வேதனை, ஈழப்படுகொலைக்கு மத்திய அரசின் மலையாள லாபி செய்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான கொடுஞ்செயல்.

தமிழகம் 1Trillion டாலர் பொருண்மையமாக மாறும்போது உலகம் நம்மை திரும்பிப்பார்க்கும், நம் குரலை கேட்க்கும்.

நன்றி: அதியமான்