எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் – லோகேஸ்வரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் இடம்பெறும் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 29.09.2022வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
Loges எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் - லோகேஸ்வரன்இந் நிலையில் சிறையிலிருந்து விடுதலைபெற்றபின்பு  ‘இலக்கு’ வார இதழுக்கு அவர் வழங்கிய நேர்காணல்…
 
▪︎சரா
• யுத்தகாலத்தில் இராணுவத்தைப் பயன்படுத்தி இனவழிப்புச்செய்த இலங்கை அரசு, யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இனவழிப்பிற்காக திணைக்களங்களைப் பயன்படுத்துகின்றது.
வவுனியா சிறையில் மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபபட்டவர்கள்தான் சிறைச்சாலை அதிகாரிகளைப்போல தொழிற்படுகின்றனர். 
• குருந்தூர்மலையைப் பாதுகாப்பதற்காகவும், செம்மலை நீராவியடியைப் பாதுகாப்பதற்காவும், மணலாற்றைப் பாதுகாப்பதற்காகவும் நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.
கேள்வி :- தங்களை காவல்துறையினர் கைதுசெய்திருந்தனர், நடந்தது என்ன?பதில்:- குருந்தூர்மலை அடிவாரத்திலே கடந்த 21.09.2022அன்று மக்களினுடைய தன்னெழுச்சிப் போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அந்தப்போராட்டத்திலே நானும் கலந்துகொண்டிருந்தேன்.குருந்தூல்மலை என்பது தமிழர்களுக்கு உரிந்தான பிரதேசம். குருந்தூர்மலையிலே தமிழர்களின் இராசதானியும், பண்டைய ஆதி சிவன் ஐயன் ஆலயமும் இருந்திருக்கின்றது.இந் நிலையில் குருந்தூர் மலைப் பகுதியையும், குருந்தூர்மலைப் பகுதிக்கு அருகிலுள்ள பெருமளவான வயல் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் கபளீகரம்செய்து, ஒரு சிங்கள பௌத்த குடியேற்றத் திட்டத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.அங்கு இடம்பெறுகின்ற விகாரையினுடைய நிர்மாணப்பணியினை உடனடியாக இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று கட்டளை பிறப்பித்தும் அக்கட்டளையை மீறுகின்ற வகையிலேயே ஒரு மிகப்பெரிய கட்டுமானப்பணியினை தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.புதிய கட்டுமானங்களை மேற்கொள்வது தொல்லியல் திணைக்களதனதின் பணியல்ல. அங்கிருக்கக்கூடிய தொன்மையின பொருட்களைப் பாதுகாப்பதே தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியாகும். ஆனால் குருந்தூர் மலையில் இடம்பெறுவது வேறு கதை.நீதிமன்றினுடைய கட்டளையினை தான்தோன்றித்தனமாக  தொல்லியல் திணைக்களம் மீறிச்செயற்படும்போது, நீதிமன்றக் கட்டளையை  நடைமுறைப்படுத்தவேண்டிய முல்லைத்தீவுக் காவல்துறையினர் அதற்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.இவ்வாறான சூழலில் அங்கு இடம்பெற்ற மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தில் நாமும் கலந்துகொண்டு மலையடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் மலையின் மேற்பகுதிக்குச் சென்று நீதிமன்றக் கட்டளை உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? என்பதுதொடர்பில் பார்வையிட்டோம்.  அங்கு நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுவது தொடர்பிலும் கேள்வி எழுப்பியிருந்தோம்.Kurunthur2 எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் - லோகேஸ்வரன்அதன் பின்னர் தொல்லியல் திணைக்களம் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் செய்துகொண்ட முறைப்பாட்டின்  அடிப்படையில், குறித்த போராட்டம் இடம்பெற்ற அன்றைய தினத்திலேயே முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு, மறுநாள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.இதன் பின்னர் 23.09.2022அன்று பிற்பகல் 2.30மணியளவிலே முல்லைத்தீவு காவல்துறையினுடைய ஒரு பொறுப்புநிலை அதிகாரி தொலைபேசியூடாக என்னைத் தொடர்புகொண்டு எனக்கெதிராகக் குற்றச்சாட்டொன்று இருப்பதாகத தெரிவித்து காவல்நிலையம் வருமாறு அழைத்திருந்தார்.அந்தவகையில் காவல்துறை அதிகாரியின் அழைப்பாணையை ஏற்று காவல் நிலையம் சென்றபோது நான் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன்.
கேள்வி :- காவல்துறையினரின் இந்தக் கைது நடவடிக்கையினை எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்:- காவல்துறையினரின் இந்தக் கைது நடவடிக்கையானது தொடர்ச்சியாக நிலஅபரிப்புக்கு எதிராக போராடும் எம்மவர்களை அச்சுறுத்துவதாகவும், தமிழர் பகுதிகளில் அபகரிப்பில் ஈடுபடும் அரச திணைக்களங்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவுமே பார்க்கமுடிகின்றது.வடக்கு, கிழக்குத் தமிழர்தாயகம் என்னும் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு அரசின் ஆசியுடன் பல்வேறு திணைக்களங்கள் தற்போது நமது தாயகப் பகுதிகளில் செயற்பட்டுவருகின்றன.குறிப்பாக யுத்தகாலத்திலே இராணுவத்தினுடைய படைப்பிரிவுகளைப் பயன்படுத்தித்தான் இன அழிப்புகளை மேற்கொண்டார்கள் .ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் திணைக்களங்களைப் பயன்படுத்தி இனவழிப்புச்செய்கின்றார்கள்.இனவழிப்பு என்பது ஒரு இனக்கூடனடத்தைக் கொல்வது மாத்திரமல்ல. ஒரு பிராந்தியத்திலே தொடர்ச்சியாக வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலைச் சீரழிப்பதும், அவர்களின் வாழ்விடங்களை கபளீகரம் செய்வதும் இனவழிப்பின் ஒரு வடிவமாகும். இது ஒரு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாகும்.இந் நிலையில் இவ்வாறு இனவழிப்புச்செய்கின்ற திணைக்களங்களைப் பாதுகாக்கின்ற நோக்கத்துடன் காவல்துறையினர் தொழிற்படுகின்றனர்.இதுமாத்திரமின்றி தன்னெழுச்சியாகப் போராடுபவர்களைச் சிறைக்குத் தள்ளுவதன் மூலம் அவர்களின் மன வலிமையைச் சிதைத்விடலாமென காவல்துறையினர் நினைக்கின்றனர்.
 
கேள்வி:-  இதே விடயம் தொடர்பில் முன்னர் கைதுசெய்யப்பட்ட ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோர் மறுநாள் பிணையில் வெளிவந்தனர். ஆனால் தங்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டதே?பதில்:- என்னைப்போன்ற ஒரு அமைப்புடையவர் குருந்தூர்மலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், எனவே ஆள் அடையாள அணிவகுப்பொன்றில் என்னை நிறுத்தி, அதன்மூலம் அடையாளம் கண்டுதான் என்னை தண்டிக்கவேண்டுமென காவல்துறையினர் நீதிமன்றைக் கோரியிருந்தனர். காவல்துறையினரின் இந்த திட்டமிட்ட நடவடிக்கையினாலேயே நான் சிறைசெல்லவேண்டி ஏற்பட்டது.Kurunthur எமது மண்ணை பாதுகாக்க நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் - லோகேஸ்வரன்ஆனால் நான் குருந்தூர்மலை போராட்டத்தில் ஈடுபட்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். அது காவல்துறையினருக்கும் தெரியும். என்னைக் கைதுசெய்த காவல்துறை அதிகாரி போராட்டம் நடந்தபோது குருந்தூர்மலையிலும் நின்றிருந்தார். நான் அந்த இடத்தில் இருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.எனினும் என்னைச் சிறைக்கு அனுப்பவேண்டும் என்ற நோக்குடனேயே காவல்துறையினர் நீதிமன்றிடம் அடையாள அணிவகுப்பைக் கோரியிருந்தனர்.போராட்டத்தில் நான்தான் நின்றேன் என காவல்துறையினர் எனக்கெதிராக  ஒரு வழக்கு தொடர்ந்திருந்தால், கைதுசெய்யப்பட்ட அதே நாள் அல்லது அதற்கு மறு நாள், நான் பிணையிலே விடுதலை செய்யப்படவேண்டியவன்.என்னைச் சிறைக்கு அனுப்பவேண்டும், எனது மனோநிலையை உடைக்கவேண்டும் என்ற நோக்கோடு காவல்துறையினர் செயற்பட்டனர்.கேள்வி:– சிறை நாட்கள் எப்படி இருந்தன?பதில்:- கடந்த 23.09.2022அன்று காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன். மறுநாள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.சிறையிலே திட்டமிட்டு எனது உளவியலைச் சிதைக்கின்ற பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டன.என்னுடைய கையிலிருந்ந கேதார கௌரி விரத நூலினை அறுத்தெறிந்தனர். இது ஒரு மத நிந்தனையாகும்.  இலங்கையில் இருக்கக்கூடி எந்த குடிமகனுக்கும் தான் சார்ந்த மதத்தினை, தான்சார்ந்த இறை நம்பிக்கையினைப் பின்பற்றுகின்ற உரிமை இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் கொச்சைப்படுத்தினர்.இதுமித்திரமன்றி சிறைச்சாலைக்கு சென்ற முதல்நாள் மலசலகூட வாசலிலே இரவில் தூங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.மேலும் மிக மோசமான குற்றமிளைத்தவர்கள்தான் சிறைச்சாலையை நடாத்துகின்ற அளவிற்கு இலங்கையின் சிறைச்சாலை இருக்கின்றது என்பதற்கு உதாரணமாக வவுனியா சிறைச்சாலை இருக்கின்றது.மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபபட்டவர்கள்தான் சிறைச்சாலை அதிகாரிகளைப்போல தொழிற்படுகின்றனர். இது மிக மோசமான செயற்பாடாகும்.அத்தோடு சிறையிலே சுகாதாரம் என்பது மிகவு கேள்விக்குறியானதொரு விடயமாகக் காணப்படுகின்றது. மலசலகூடவாசலில் வைத்து உணவுபரிமாறப்படுகின்றது. அதனைவிட தேநீர் அருந்துகின்ற குவளை அளவிலான குவளையில்தான் குளிப்பதற்கு நீர் கிடைக்கின்றது.சிறையிலே நித்திரை என்பது நினைத்துப்பார்க்முடியாத ஒரு விடயமாக்இருக்கின்றது.ஆனால் சிறைச்சாலையில் இருந்த அந்த நாட்களில் நான் ஒன்றைமட்டும் எனது மனதிலே சுமந்திருந்தேன். நான் எனது இனத்தின் விடுதலைக்காக போராடியிருக்கின்றேன். எனவே நான் செய்கின்ற இத் தியாகம் பெரியவிடயமே அல்ல.
ஏன் எனில் உயிரைக்கூடத் துச்சமென நினைத்து போரடியவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களின் தியாகங்களுடன் ஒப்பிடுகையில் நான் பட்ட துன்பங்கள் ஒரு சாதாரண விடயங்களேயாகும்.
 
கேள்வி:- ஆக்கிரமிப்புக்கு எதிரான செயற்பாடுகளில் இனியும் தங்களை காணமுடியுமா?பதில்:- தொடர்ச்சியாக நான் குருந்தூர்மலை விடயம் தொடர்பில் போராடுவேன்.குருந்தூர்மலை மாத்திரமல்லாமல், இந்த மண்ணிலே எமது இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்ற அத்தனை இன அழிப்புச் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராடுவேன்.சிறைக்குச்சென்றுவந்துவிட்டேன் அல்லது, மீண்டும் காவல்துறையினர் கைதுசெய்வார்கள் என்ற எந்தப் பயமும் எனக்குக் கிடையாது.காவல்துறையினரால் கைதுசெய்யப்படுதல், சிறையில் அடைக்கப்படுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதற்காக, அறுபதுவருடங்களுக்கு மேலாக நடாத்தப்படுகிற விடுதலைப் போராட்டப் பயணத்திலிருந்து ஒருபோது வழிதவறிச் செல்ல முடியாது.நிச்சயமாக வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்கின்ற கோட்பட்டை நிலைநிறுத்துவதற்காக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஜனநாயகவழிகளில் நான் தொடர்ச்சியாகப் போராடுவேன்.குருந்தூர்மலையைப் பாதுகாப்பதற்காகவும், செம்மலை நீராவியடியைப் பாதுகாப்பதற்காவும், மணலாற்றைப் பாதுகாப்பதற்காகவும் நாங்கள் என்ன விலைகொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.