Tamil News
Home உலகச் செய்திகள் “எனது குழந்தைகளை விட்டுவிடுங்கள்“ மியன்மாரின் காவல்துறையினரிடம் மன்றாடிய கன்னியாஸ்திரி

“எனது குழந்தைகளை விட்டுவிடுங்கள்“ மியன்மாரின் காவல்துறையினரிடம் மன்றாடிய கன்னியாஸ்திரி

மியன்மாரின் காவல்துறையினர் முன்னாள் முழங்காலில் அமர்ந்து எனது குழந்தைகளை ( ஆர்ப்பாட்டக்காரர்களை) விட்டுவிடுங்கள் எனது உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என கன்னியாஸ்திரி Ann Rose Nu Tawng மன்றாடினார்.
மியன்மார் காவல்துறையினரும் படையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாரானவேளை கன்னியாஸ்திரி தனது உயிரையும் பயன்படுத்தாமல் நடுவீதியில் முழங்காலில் அமர்ந்து மன்றாடியது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதுடன் பௌத்தர்கள் அதிகமாக வாழும் அந்த நாட்டில் அவருக்கு பெருமதிப்பை பெற்றுகொடுத்துள்ளது.
நான் முழங்காலில் அமர்ந்து குழந்தைகளை சுட வேண்டாம் சித்திரவதை செய்யவேண்டாம் என மன்றாடினேன், அதற்கு பதில் என்னை சுட்டுக்கொல்லுமாறு கேட்டுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
Myitkyinaநகரில் திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கச்சின் மாநிலத்தின் தலைநகரமான ஆர்ப்பாட்டக்காரர்கள் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தயாராகினர்.
காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைக்க ஆரம்பித்ததும் கன்னியாஸ்திரியும் வேறு இரண்டு கன்னியாஸ்திரிகளும் காவல்துறையினரை அங்கிருந்து விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
காவல்துறை அவர்களை கைதுசெய்வதற்காக துரத்த ஆரம்பித்தனர் நான் கவலையடைந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வேளையே 45 வயது கன்னியாஸ்திரி நடுவீதியில் முழங்காலில் அமர்ந்தார்.
ஆனால் காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள ஆரம்பித்ததும் அவர் காவல்துறையினரை நோக்கி மன்றாடதொடங்கினார். சிறுவர்கள் அச்சமடைந்து முன்னாள் ஓட ஆரம்பித்தனர்,என்னால் எதுவும் செய்ய முடியவில்லை நான் ஆண்டவரை பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன் என அவர் குறிப்பிட்டார்.
அவர் தனக்கு முன்னாள் ஒருவர் தலைவயில் சுடப்பட்டு விழுவதை பார்த்தார். அதன் பின்னர் கண்ணீர் புகையை உணர்ந்தார். நான் உலகம் சிதறுண்டு போவதை உணர்ந்தேன்,நான் அவர்களை மன்றாடிக்கொண்டிருந்தவேளை இது இடம்பெற்றது குறித்து நான் மிகவும் கவலையடைந்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அருட்சகோதரி காவல்துறையினரிடம் மன்றாடியது இது முதல்தடவையில்லை.
பெப்ரவரி 28 ம் திகதி அவர் இதேபோன்று காவல்துறையினரிடம் மன்றாடியிருந்தார்.
கலகத்தடுப்பு காவல்துறையினரிடம் சென்று முழந்தாலில் அமர்ந்து அவர் மன்றாடியிருந்தார். பெப்ரவரி 28ம் திகதயே நான் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
Exit mobile version