Tamil News
Home உலகச் செய்திகள் எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் – பொறிஸ் ஜோன்சன்

எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் – பொறிஸ் ஜோன்சன்

ஒப்பந்தங்கள் ஏதும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “தற்சமயம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது ஒன்று தான். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இல்லை. இதுவே எங்கள் அமைச்சரவையின் வலுவான பார்வையாக இருக்கிறது.

எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவுஸ்திரேலியா, கனடாவை (வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல்) போல நாங்கள் விரைவில் தீர்வு காண இருக்கின்றோம்” என்றார்.

இதற்கமைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது,

இந்த வகையில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை செயற்பாட்டிற்குக் கொண்டுவர பிரதமர் தீவிரமாக முயன்றார். ஆனால் அவரது ஒப்பந்த வரைவைக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்தனர்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version