Tamil News
Home செய்திகள் எந்தத் தடை ஏற்படினும் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறக்கப்படும் – யாழ். பல்கலைக்கழக மாணவர்...

எந்தத் தடை ஏற்படினும் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறக்கப்படும் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி  பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித் தளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட தூபியானது நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நினைவுத்தூபியை இடித்ததையடுத்து  மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதுடன், மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற் கொண்டு அழுத்தம் கொடுத்த காரணத்தினால் மீண்டும் அதே இடத்தில் நினைவுத் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் ஜனவரி 11அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டு நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்தது. இத்தூபி நாளை திறந்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எது நடந்தாலும் நாளைய தினம் திட்டமிட்டபடி முள்ளி வாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்படுமென யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது

Exit mobile version