எக்பிரஸ்பேர்ள் கப்பல் அனர்த்தம் – மன்னிப்புக் கோரியது எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனம்

எக்பிரஸ்பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக இலங்கையில் வாழ்வாதாரத்திற்கும் சூழலிற்கும் ஏற்பட்ட இழப்புகளிற்காக கப்பலை இயக்கிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.

சிஎன்ஏயிற்கு வழங்கிய பேட்டியில், எக்ஸ்பிரஸ் பீடர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்மல் யாட்ஸ்கவிட்ஸ் மன்னிப்பு கோரியுள்ளதுடன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

கப்பல் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து ஏற்பட்ட நிலைமையை அவதானிக்க போன்ற சர்வதேச சூழல் நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்,கடலோர பகுதிகளை சுத்தம் செய்வதற்காக கனரக இயந்திரங்களை வழங்கியுள்ளோம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் வாழ்வாதராத்திற்கும் சுற்றுசூழலிற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிற்காக இலங்கை மக்களிடம் நான் மன்னிப்பை கோருகின்றேன் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.