Tamil News
Home உலகச் செய்திகள் உலகில் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம்தான் –  ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் மோடி

உலகில் மிகப்பெரிய பிரச்சினை தீவிரவாதம்தான் –  ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் மோடி

தற்போது உலகமே எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை தீவிரவாதம்தான் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  கூறியுள்ளார்.

இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக  உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது தலைமை வகிக்கும் ரஷ்யா,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த உச்சி மாநாட்டில் தலைவர்களை இணையம் வாயிலாக ஒருங்கிணைத்திருந்தது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “தீவிரவாத பிரச்சனையை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கையாள வேண்டும்.  தீவிரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் தூண்டிவிடும் நாடுகள் குற்றம் செய்பவர்களாக அடையாளம் காணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை.இந்த திட்டம் மூலம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திற்கு பின்பு தற்சார்புள்ள மற்றும் மீண்டு வரும் திறனுடைய மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவாகும்.

கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது இந்தியா 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்தது. எங்களது உற்பத்தி மற்றும் விநியோக திறன்களும் இதைப் போலவே மனித குலத்துக்கு சேவையாற்றும்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்று இந்தியா நம்புகின்றது. அதில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க பிரிக்ஸ் நாடுகள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

Exit mobile version