உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது- விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வேடேல் கடலில் அமைந்திருந்த   4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்துள்ளது.

புவி வெப்பமயமாதலே இந்தப் பனிப்பாறை உடைந்ததற்கு முக்கிய காரணம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, அன்டார்டிக்காவின் வடக்கே இருந்த மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் உடைந்து நொறுங்கியது.

இதனிடையே, உலக வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸை எட்டினால் அன்டார்டிக்காவில் உள்ள மூன்றில் ஒரு பகுதிபனிப்பாறைகள் உடைந்துவிடும் என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பூமியின் வெப்பநிலை 1.02 டிகிரி செல்சியஸ் ஆகும்.

“கார்பன் வெளியீட்டையும், வளிமண்டலம் வெப்பமடைவதையும் தடுத்தால், இப்பனி அடுக்குப்பாறையின் வலிமையைப் பயன்படுத்தி, அது உருகி சிதைவதைத் தடுக்கலாம். கடந்த 10,000 ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு லார்சன் சி அனி அடுக்குப் பாறைகள் மோசமான மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. காரணம் இந்த பனி அடுக்குப் பாறை இதுவரை காணப்படாத அளவுக்கு மெலிதாக இருக்கிறது” என பனி பாறைக் குறித்து ஆராய்ந்து வரும் ஆராராய்ச்சி குழுவின் தலைவர் மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் இருக்கும் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வே முனைவர் ஜேம்ஸ் ஸ்மித் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.