Home உலகச் செய்திகள் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி ஜேர்மனியில் தயாரிப்பு

உலகின் முதல் பறக்கும் டாக்ஸி ஜேர்மனியில் தயாரிப்பு

உலகின் முதல் பறக்கும் டாக்ஸி சேவை ஜேர்மனியின் முனிச் நகரில் அறிமுகம் ஆகிறது. இந்த சேவை வரும் 2025ஆம் ஆண்டிற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் லிலியம் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டேனியல் வீகண்ட் கூறுகையில், எங்கள் நிறுவனம் மத்திய முனிச்சிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த சேவை அறிமுகம் செய்யப்படும். இது தான் உலகின் முதல் பறக்கும் டாக்ஸியாக மாறும். பல மில்லியன் டொலர் செலவு செய்து இதை உருவாக்கியுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகம் ஆகும்.

இந்த டாக்ஸிக்கு த லிலியம் ப்ரோடோடைப் பறக்கும் டாக்ஸி என்று பெயரிட்டுள்ளோம். 10 நிமிடத்தில் மான்கட்டன் நகரில் இருந்து கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும். இதற்கு கட்டணமாக 70 டொலர் வசூலிக்கப்படும்.

தற்போது சோதனை முயற்சிகள் நடந்து வருகின்றது. இந்த சேவையை இயக்குவதற்காக ஜேர்மனி அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றோம். அனுமதி கிடைத்ததும் இயக்குவோம்.

லிலியம் பறக்கும் டாக்ஸி பற்றரியில் இயங்கக்கூடிய வகையில் தயாரித்துள்ளோம். ஒரு முறை சார்ஜ் ஏற்றப்பட்டால் சுமார் 186 மைல்கள் (300 கிலோ மீற்றர்) பறக்கும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 196 கிலோ மீற்றர் ஆகும் என்றார்.

இதனிடையே பறக்கும் டாக்ஸி சேவையை ஆரம்பிக்கும் முனைப்பில் உலகில் 20 நிறுவனங்கள் முழுமையாக உள்ளன. மோர்கன் ஸ்டெய்ன்லி நிறுவனம் இத்திட்டத்தின் கீழ் 850 பில்லியன் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

fly உலகின் முதல் பறக்கும் டாக்ஸி ஜேர்மனியில் தயாரிப்புகூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜ், கூகுளின் பொறியாளர்களால் நடத்தப்படும் கிட்டி ஹாக் என்ற நிறுவனத்திற்கு நிதி ரீதியாக ஆதரவு அளித்து வருகின்றார். போயிங் மற்றும் ஏயா பஸ் ஆகியவை பறக்கும் கார் திட்டத்திற்கான பணிகளில் இறங்கியுள்ளன.

டைம்லர், ரொயற்றா, போர்ஷே உள்ளிட்ட வாகன உற்பத்தியாளர்கள் இந்தத் துறையில் முதலீடு செய்கின்றனர் எயார் டாக்ஸி சேவையை உருவாக்கி வரும் உபேர், அவுஸ்திரேலியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ் மற்றும் மெல்போனில் 2023இற்குள் திறக்க திட்டமிடப்பட்டள்ளது.

 

Exit mobile version