உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் இணைந்தது இந்தியா ஜெய்பூர்

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இதேவேளை கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற பெருமையை ஆமதாபாத் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.