Tamil News
Home உலகச் செய்திகள் உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்தது

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்தது

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.  

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்துள்ள அதே நேரம், இதுவரை 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.29 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version