உருமறைப்பு ஆடைகள் விற்பனைக்கு சிறீலங்காவில் தடை

சிறீலங்காவில் படையினர் அணிவதைப் போன்ற உருறைப்பு ஆடைகள் விற்பனை செய்வதை சிறீலங்காவின் புதிய அரசு தடை செய்துள்ளது.

இந்த ஆடைகளின் விற்பனையானது, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளதாகவும், அதனை அணிபவர்களை படையினர் என மக்கள் எண்ணுவதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் போர் இடம்பெற்றபோது இவ்வாறான தடைகள் இருந்தன, ஆனால் அது அவசரகாலச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தடையானது எந்த சட்டத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ளது தொடர்பில் குழப்பங்கள் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.