உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு – சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில்  சீனா  ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையில், “உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக  சீனா இன அழிப்பில் ஈடுபடுகிறது. அதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் முஸ்லிம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். சீனாவின் ஏனைய  மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்க அத்துமீறும் செயல்களில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அசோசியேட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் தெரியவந்தது.

இந்த நிலையில் அமெரிக்க நிபுணர் குழுவும் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில்  சீனா  ஈடுபட்டுள்ளது என்று குற்றச்சாட்டை வைத்துள்ளாது. ஆனால், இதனை  சீனாதொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.