உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி, இன்று நாடாளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.

2019ம் ஆண்டில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு   சுமார் 500 பேர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

See the source image

போராட்டம் நடத்துவதற்கான முடிவினை சிறீலங்காவின் கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு மற்றும் கொழும்பு பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கறுப்பு ஞாயிறு போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மற்றும் அநுரகுமாரா திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன  ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் உயிர்த்த  ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் சிறீலங்காவில் நீதி நிலை நாட்டப்பவில்லையெனில் நியாயத்தை பெற்றுக் கொள்ள சர்வதேசத்தை நாடா தயாராகவுள்ளதாகவும் இது தொடர்பில் மார்ச் 7ம் நாள் கறுப்பு ஞாயிறு நாளாக  நினைவு கூறப்படும் என்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.