உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலகுவாகத் தவிர்த்திருக்க முடியும்: மகிந்த

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை இலகுவாகத் தடுத்திருக்க முடியும். தாக்குதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளை அதிகாரத்தில் இருந்தவர்கள் அலட்சியப்படுத்தியமையால்தான் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன” என சிறீலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தியத்தலாவ இராணுவ முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு வெளியேறும் கடேட் படையினரின் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மகிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்களுக்கும் உல்லாசப் பயணிகளினதும் வருகையை அதிகரிப்பதற்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நாடு பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டது. ஆனால், இந்தச் சவாலை எதிர்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை இலகுவாகத் தடுத்திருக்க முடியும். தாக்குதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளை அதிகாரத்தில் இருந்தவர்கள் அலட்சியப்படுத்தியமையால்தான் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன.”
92 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இலகுவாகத் தவிர்த்திருக்க முடியும்: மகிந்த