Tamil News
Home செய்திகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை

உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை

திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் அவ்வமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா நேற்று (03) முறைப்பாடு செய்துள்ளார்.

“கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் அமைப்பினர் தங்களது உறவுகளைத் தேடி அவர்களுக்காக போராட்டம் மேற்கொண்ட கூடாரத்தை, நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் இவ்வாறு ஈனத்தனமாக அகற்றியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்குரிய நடவடிக்கைகளை காவலதுறையினர் மிக விரைவில் எடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version