Tamil News
Home செய்திகள் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை – அமைச்சர் டிரான் அலஸ்

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை – அமைச்சர் டிரான் அலஸ்

“விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராகஇருந்தாலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிதுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சமூக பொலிஸ் குழுக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு ஒன்றிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்றதும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தும் சவாலை எங்களால் சமாளிக்க முடிந்தது. அதன் பின்னர், போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றங்களில் இருந்து நாட்டை விடுவித்து, நாட்டைப் பாதுகாப்பதே எனது நோக்கமாக இருந்தது.

அதற்காகவே நீதித்துறையை தொடங்கினோம் இதை நீண்ட நாட்களாக ஆய்வு செய்து தேவையான திட்டங்களை தயாரித்தோம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் தென் மாகாணத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர், நாட்டில் பல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் மறைந்துள்ளனர் இவர்களில் சிலர் எம்மிடையே உள்ளனர். நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஜூன் 30ஆம் திகதிக்குள் முழுமையாக ஒடுக்கும் இலக்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளோம். யார் தலையிட்டாலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படாது.

மக்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி தங்கள் பகுதிகளின் தகவல்களை எங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவையான மேலதிக நடவடிக் கைகளை மேற்கொள்வதற்காக செயற்பட்டு வருகின்றோம். இந்த ஆபத்தை ஒழிக்க அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைக்க வேண்டும் அல்லது ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

Exit mobile version