ஈழப் போர் ஒரு கிரபிக் நாவல்

ஐ.நா சார்பாக 2004இல் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பெஞ்சமின் டிக்ஸ் என்பவர் இலங்கை சென்றிருந்தார். 2008ஆம் ஆண்டு யுத்தம் தீவிரம் அடையும் போது அவர் வன்னியிலிருந்து வெளியேறினார். தமிழ் மக்களிடம் அவர் கண்ட நேர்காணல்கள், நேரடி கள அனுபவங்களின் அடிப்படையில், ‘VANNI A FAMILY’S STRUGGLE THROUGH THE SRI LANKAN CONFLICT’ என்ற கிரபிக்ஸ் நாவலை எழுதியுள்ளார்.

இந்த நாவலின் சித்திரங்களை வரைந்தவர் வரைகலைஞர் லிண்ட்ஸே பொல்லாக். பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் செம்பியன்பற்று என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பத்தினூடாக இந்த கிரபிக் நாவலானது ஈழப் போரின் வலிகளைப் பதிவு செய்கிறது.