ஈழத்தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் ஏற்றிச் செல்லப் பட்டிருக்கின்றனர் – மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ்

ஜேர்மனியிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவதை எதிர்த்து பிரேமன் மனித உரிமை அமைப்பும் ஏனைய சில அமைப்புகளும் இணைந்து ஜேர்மனியில் போட்ஸ்ஹைம் நகரில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கு எதிரில் கடந்த திங்கள் மாலையிலிருந்து ஒரு தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.

மனித உரிமை ஆர்வலர் விராஜ் மென்டிஸ் இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிவருகிறார். அவர் தற்போது அனுப்பி வைத்துள்ள செய்தியைக் கீழே தருகிறோம்.

“ஒரு வாகனம் தடுப்பு முகாமுக்கு உள்ளே வந்து அகதிகளில் ஒரு பகுதியினரைக் கொண்டு சென்றிருக்கிறது. அந்த வாகனத்தைச் செல்லவிடாமல் தடுக்க நாங்கள் முயற்சித்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களைத் தள்ளிவிட்டபின் வாகனம் வெளியேறியது.

வாகனம் சிறியதாக இருக்கின்ற படியால் மேலும் சில தமிழ் அகதிகள் உள்ளே இருக்கலாம் என எண்ணுகிறோம். அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

அண்மையில் சிறீலங்காவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வந்திருக்கும் ஜேர்மன் இனத்தவர்கள் நால்வரைக் கொண்ட குழுவில் மூவரின் கடவுச்சீட்டு விபரங்களை காவல்துறையினர் எடுத்திருக்கிறார்கள்.”

மேலும் தகவல்களுக்கு https://humanrights.de/ என்ற இணையத்தை பார்வையிடலாம்…