Tamil News
Home உலகச் செய்திகள் ஈரான், ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி சீனா அறிவிப்பு

ஈரான், ரஷ்யாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி சீனா அறிவிப்பு

ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இருப்பதாக சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில் சீனா இத்தகைய அறிவிப்பை இன்று (26) வெளியிட்டுள்ளது.

இது குறித்து சீன கடற்படை செய்தித் தொடர்பாளர் குவின் கூறும் போது, “இந்திய கடல் மற்றும் ஓமனில் சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றோம். இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சி மூன்று நாடுகளுக்கு இடையேயான கடற்படை ஒத்துழைப்பை இன்னும் ஆழமாக்கும்“ என்று தெரிவித்துள்ளார்

Exit mobile version