Tamil News
Home செய்திகள் ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம் – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

ஈரான் ஜனாதிபதி நாளை இலங்கை விஜயம் – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாளைய தினம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று உறுதிப்படுத்தியிருந்தார்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரைசியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) கூறியுள்ளார்.

Exit mobile version