ஈரான் அதிபர் தேர்தல் – கடும்போக்காளரான ரையீசி முன்னிலை

ஈரான் நாட்டு அதிபர் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணும்பணி நடந்து வருகிறது.

ஈரானின் உச்ச நீதிபதியும் போட்டியிடும் 4 வேட்பாளர்களில் ஒருவருமான எப்ராஹீம் ரையீசி 62 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதனால் கடும்போக்காளரான ரையீசி ஈரானின் அடுத்த அதிபர் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு தடை விதித்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.