ஈரானிய ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் தலைநகரான கியவ் பகுதியில், ஈரானில் தயாரிக்கப்படும் ‘காமிகேஸ்’ (kamikaze)  ஆளில்லா விமானங்களைக் கொண்டு குண்டுத் தாக்குதல்களை ரஷ்யா நடத்தியுள்ளது.

உக்ரைனின் கியவ், ட்னிப்ரோ மற்றும் சுமி ஆகிய மூன்று பகுதிகளில் நடந்த தாக்குதல்களில், நூற்றுகணக்கான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தாக்குதல்களில், உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு ஐந்து இடங்களை இலக்கு வைத்து 28 ஆளில்லா விமானங்கள்  குண்டுத் தாக்குதல்களை செய்துள்ளதாக மேயர் விடாலி க்ளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆளில்லா விமானங்களை நோக்கி விமான எதிர்ப்பு சாதனங்கள் சுட்டுக்கொண்டே இருந்தன. அவ்வாறு இடைமறிக்கப்பட்ட ஒரு ஆளில்லா விமானத்தை சுடும் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.