ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி படுகொலை

ஈரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள்  சுட்டுக் படுகொலை செய்துள்ளனர்.

பாதுகாவலர்களுடன் வாகனத்தில் சென்ற போது தாக்குதலைத் தொடுத்த தீவிரவாதிகள், விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவையும் அவரது காவலர்களையும் படுகொலைசெய்துள்ளனர்.

ஈரான் அரசு, அதன் அணுசக்தி மேம்பாட்டுக்காக யுரேனியம் செறிவூட்டலை பெருக்கி வருவதாக வல்லரசு நாடுகள் கவலை வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டின் அணுசக்தி தலைமை விஞ்ஞானியை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்.

2010-2012ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த பின்னணிகளின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம்சுமத்தியுள்ளது.

நன்றி – பிபிசி