ஈராக், சிரியாவில் 10,000இற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயற்படுகின்றனர் ஐ.நா

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பாதுகாப்சபை கருத்துத் தெரிவிக்கையில், ஐ.எஸ். தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கியுள்ளனர். சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் உலகமே முடங்கியிருக்கும் நேரத்தில் ஆட்சேர்ப்புஇ நிதித்திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தலையெடக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈராக்கிலிருந்து 2014ஆம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டனர். அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சிரியாவில் அதிபர் ஆசாத் அரசுப் படைகளால் ஐ.எஸ் படைகள் பெருமளவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.