Home செய்திகள் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் – கேணல் உட்பட 250 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் – கேணல் உட்பட 250 பேர் பலி

சனிக்கிழமை காலை இல்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பின் கொமோண்டோ படையணிகள் மேற்கொண்ட திடீர் அதிரடித் தாக்குதல்களில் இஸ்ரேலின் பல காவல்நிலைகள் மற்றும் படைத்தளங்கள் கைப்பற்றப்பட்டதுடன், 250 இற்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களில் பெருமளவானவர்கள் படையினர். ஏறத்தாள 300 ஹமாஸ் கொமொண்டோக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். காலை 6 மணியளவில் 5000 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவிய ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் இரும்பு ஏவுகணை தடுப்பு அரண்களை உடைத்த பின்னர் இஸ்ரேலுக்குள் உள்நுளைந்துள்னர்.

உந்துருகிளகள், பறக்கும் கிளைடர்கள், புல்டோசர்கள் சகிதம் இஸ்ரேலிய காவலரன்களை உடைத்து முன்நகர்ந்த ஹமாஸ் கொமோண்டோக்கள் நகேல் ஒஸ் தளம் மற்றும் டெரோட் காவல் நிலையம் உட்பட பல படை நிலைகளை கைப்பற்றியதுடன், டெரோட் பகுதியில் இடம்பெற்ற மோதலில் 20 இஸ்ரேலிய காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெருமளவான இஸ்ரேலிய படை வாகனங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதுடன், பல வாகனங்கள் கைப்பற்றப்பட்டு காசா பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Col Yonatan Steinberg இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு மிகப்பெரும் தாக்குதல் - கேணல் உட்பட 250 பேர் பலிகிரேம் சாலோம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலின் நாஹால் இலகுகாலாட் படை பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் ஜேனாதன் ஸ்ரின்பேர் கொல்லப்பட்டுள்ளதாக (படத்தில் உள்ளவர்) இஸ்ரேல் படைத்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தாக்குதல்களில் இஸ்ரேலின் தரப்பில் 250 பேர் கொல்லப்பட்டதுடன், 950 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் 270 பேருக்கு மேற்பட்டவர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தாக்குதலின் பின்னர் இஸ்ரேலிய வான்படையினர் காசா பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் 232 பேர் கொல்லப்பட்டதுடன், 1620 பேர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ஹமாஸ் படையினர் பெருமளவான இஸ்ரேலிய படையினரை சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களில் மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவரும் இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது சிரியா தலைமையிலான அரபு நாடுகள் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும்.

 

 

 

Exit mobile version