இவ்வாண்டும் சுவீஸ் படையினரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மாயம்

கடந்த ஆண்டில் மட்டும் சுவிஸ் படைத்துறை 102 துப்பாக்கிகளை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 81 தாக்குதல் சுரிகுழல்துப்பாக்கிகள்(( assault rifles) ஏனையவை கைத்துப்பாக்கிகள்.

கடந்த செய்வாயன்று சுவிஸ் செய்தித்தாள் வெளியிட்ட விபரங்களின்படி இழக்கப்பட்ட ஆயுதங்களில் 69 ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளன, மேலும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்று அழிக்கப்பட்டது. மீதமுள்ள 32 ஆயுதங்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படைத்துறை செய்தித் தொடர்பாளர் டேனியல் ரீஸ்ட் இந்த அறிக்கையை உறுதிப்படுத்தியுள்ளார்.Stgw 90 1 இவ்வாண்டும் சுவீஸ் படையினரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மாயம்

இழந்த ஆயுதங்ளில் 26 ஆயுதங்கள் ஆண்டு மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாகவும் , பெரும்பான்மையான ஆயுதங்கள் காவல்துறை நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டதாகவும் ஏனையவை பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலும் அறியமுடிகிறது.

திருடப்படுவது என்பதற்கு அப்பால் படையினர் தவறவிடும் ஆயுதங்களின் அளவு பெருந்தொகையானதாக கடந்தகாலங்களில் காணப்பட்டுவந்துள்ளது.சுவிஸ் பொது போக்குவரத்து சாதனங்களில் இவ்வாறு தவறவிடப்படும் ஆயுதங்கள் மிக அதிகம்.

தவறவிடப்படும் ஆயுதத்திற்காக படைவீரர் ஒருவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

சுவீஸ் நாட்டில் கட்டாய படைத்துறை சேவை நடைமுறையில் உள்ளது. வலுவுள்ள ஆண்கள் அனைவரும் படைத்துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் மற்றும் அவர்களே அவர்களுக்கான ஆயுதத்தை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.43759485 jpg இவ்வாண்டும் சுவீஸ் படையினரின் நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் மாயம்

இது சுவிஸ்  படையினரின் நீண்டகால பாரம்பரியமாக உள்ளது, இது நெருக்கடி காலங்களில் படைத்துறை பயிச்சி பெற்றவர்களை உடனடியாக தேவை ஏற்படும்போது உரிய இடங்களில் உடனடியாக நிலைப்படுத்த எதுவாக அமையும்.

சுவிட்சர்லாந்து உலகின் மிக உயர்ந்த துப்பாக்கி உரிமையாளர் விகிதங்களில் ஒன்றாகும். 8.6 மில்லியன் மக்கள் தொகையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் தனியார் கைகளில் இருப்பதாக பாதுகாப்பு மதிப்பிடுகிறது.