Tamil News
Home செய்திகள் இலங்கை பௌத்த நாடு“ என்ற கமால் குணரட்ணவின் இனவாத பேச்சிற்கு சி.விக்னேஸ்வரன் பதில்

இலங்கை பௌத்த நாடு“ என்ற கமால் குணரட்ணவின் இனவாத பேச்சிற்கு சி.விக்னேஸ்வரன் பதில்

அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கமால் குணரத்ன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது, “இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்“ என்று கூறியிருந்தார். இதனை எதிர்த்து வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சி.விக்னேஸ்வரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தனது கருத்துக்களை தெரிவித்தார். கமால் குணரட்ணவின் பேச்சு தமிழ் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

இலங்கை ஒரு பௌத்த நாடு என்று கூறுவது முற்றிலும் தவறான ஒரு விடயமாகும். மகாவம்சம் என்ற வரலாற்று நூல்கள் பாளி மொழியல் எழுதப்பட்ட புனை கதைகளாகும். இவற்றினால் பௌத்த தேரர்கள் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்களை வழங்கியுள்ளனர்.

சிங்கள வரலாறுகள் மற்றும் பௌத்த தேரர்கள் போலியான புனை கதைகளை வரலாறு என கூறி வருகின்றனர். அத்துடன் வடக்கு கிழக்கில் எந்த ஒரு சிங்கள பௌத்தரும் இதுவரை வசிக்கவில்லை.

இலங்கையில் பூர்வீகமாக தமிழர்களே வாழ்ந்து வந்துள்ளனர் என்றும், இதனால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளனர் என்றும் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கமால் குணரட்ணவின் பேச்சிற்கு பதிலளிக்கும் விதமாகவே சி.விக்னேஸ்வரனின் பேச்சு அமைந்துள்ளது.

Exit mobile version