இலங்கை அகதிகள் குறித்து வெளிவந்த அதிருச்சித் தகவல்! வெளிநாட்டில் விடிய விடிய நடந்த வேட்டை

பிரெஞ்சு மொழி பேசும் இலங்கை அகதிகள் புதுச்சேரி வழியாக அவுஸ்திரேலியா தப்பி செல்ல இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கடலோர படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த பிரெஞ்சு மொழி பேசும் இலங்கை அகதிகள் கள்ளத்தோணி மூலம் புதுச்சேரி, காரைக்கால் கடல் பகுதியில் இருந்து அவுஸ்திரேலியா தப்பி செல்ல இருப்பதாகவும், இதற்காக அவர்கள் புதுச்சேரி-தமிழக எல்லை பகுதிகளில் தங்கி இருப்பதாகவும் தமிழக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக, தமிழக கடலோர காவல் படையினர், புதுச்சேரி கடலோர காவல் படையினரை நேற்று உஷார்படுத்தினர்.

இதனையடுத்து, புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையுள்ள கடலோர கிராமங்களில் மீனவர்களின் உதவியோடு கடலோர காவல் படையினர் கண்காணித்தனர்.

மேலும், தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து ரோந்து படகில் சென்று கடலில் முகாமிட்டு படகுகளை கண்காணித்தனர்.

இந்திய கப்பல் படையினரும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும், பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலும் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புதுச்சேரி அடுத்த கீழ்புத்துபட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கடந்த இரு நாட்களில் தங்கி உள்ளவர்களின் விபரம், வெளி நபர்கள் தங்கியுள்ளனரா என தமிழக கியூ பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அத்தோடு, முகாம்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். புதுச்சேரி கடலோர காவல் படை எஸ்.பி., பாலசந்திரன் கூறுகையில்,

புதுச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக இலங்கை அகதிகள் செல்லலாம் என தகவல் வந்ததையடுத்து தீவிரமாக கண்காணித்து வருகிறாம்.

புதுச்சேரி கடல் எல்லை முழுவதும் கண்காணிப்பில் உள்ளது என்றார்.