Tamil News
Home செய்திகள் இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் தனுஷ்கோடி கடற்கரையில் கைது

இலங்கையை சேர்ந்த சிங்கள நபர் தனுஷ்கோடி கடற்கரையில் கைது

இலங்கையில் இருந்து அகதிகள் வருவதும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் கடந்த வருடங்களாகவே அரங்கேறி வருகின்றது இந்நிலையில் நேற்று இரவு தனுஷ்கோடி பகுதியில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சுற்றிதிரிவதாக  அங்குள்ள மீனவர்கள் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து சுமார் 12 மணி நேரங்களுக்கும் மேலாக புதுரோடு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட பிரவின்குமார் பண்டாராக்கு  சிங்கள மொழி மட்டுமே தெரிந்ததால் சிங்கள மொழி தெரியாமல் தவித்த மத்திய மாநில போலிசார் மண்டபம் அகதி முகாமில் உள்ள இருவரை அழைத்து வந்து அவர் மூலம் கைது செய்யப்பட்டவரிடம்  விசாரணை நடத்தியது,  இதன்பின் அவர் தெரிவித்த தகவலால் அதிர்ந்து போனது உளவுத்துறை தான் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்றும் கடந்த 2018 ஆம் ஆண்டு இப்பிரிவில் பணியில் சேர்ந்ததும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாராக பணியில் இருக்கும் போத்ய் ஹெராயின் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்து பல நபர்களை கைது செய்தோம் அதில் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருளை தான் எடுத்ததாகவும் இதனால் என்னை போலீசார் தேடி வந்ததாகவும் தெரிவித்தார்., இதனையடுத்து கைது செய்யப்பட்டவரின் அண்ணனை கைது செய்த இலங்கை போலீசார் தன்னை  தேடி வந்ததாகவும் இதனால் அவர்  தலைமன்னாருக்கு வந்ததாகவும் அதன்பின் தலைமன்னாரில் இருந்து மீனவர்களின்  பிளாஸ்டிக் படகு மூலம்  தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிக்கு வந்ததாகவும் தெரிவித்தார் பிரவின்குமார் பண்டாரா.,

இதனையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் கள்ளத்தனமாக படகில் வந்ததாக கூறி இவர் மீது வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக மத்திய மாநில உளவுத் துறை  போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் விசாரணைக்கு பின் இவரை சென்னை புழல் சிறையில் அடைப்பார்கள் என்று தெரியவருகிறது.

அண்மையில் இலங்கை பகுதியிலிருந்து தனுஷ்கோடி வந்த அகதிகளும்  கடத்தல்காரர்களை மட்டுமே கைது செய்யப்பட்ட  நிலையில் இன்று இலங்கை போலீசாரை கைது தமிழக போலிஸ் கைது செய்து சிறையில் அடைத்தது
ராமேஸ்வரம் தீவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version