இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட பழங்கால அதிசயங்கள்

இலங்கையில் பாகியன் குகையில் 45ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்வேறு உருவங்களைக் கொண்ட கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் மிருகங்களைக் கொல்வதற்காக இந்த கருவிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவின் ஈரவலயக் காடுகளிலும் இது போன்ற கருவிகள் முன்னதாக மீட்கப்பட்டிருந்தன.

அந்த வகையில், தற்போது இலங்கையிலும் அதற்கான சான்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பாகியன் குகையில் கண்டு பிடிக்கப்பட்ட பல்வேறு கற்கால கருவிகள் மனித சரித்திரம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞான அமைப்பினால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.

ஆரம்ப ஆய்வின்படி இந்தக் கருவிகள் 45 முதல் 48 வருடங்கள் பழமை வாய்ந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக் கருவிகள் தொடர்பான கட்டுரை ஒன்று லண்டன் டெயிலி மெயிலில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.