Tamil News
Home செய்திகள் இலங்கையில் கட்டாய இராணுவ பயிற்சி – கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கம்

இலங்கையில் கட்டாய இராணுவ பயிற்சி – கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சியை வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என  அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சியை வழங்குவது குறித்து நாடாளுமன்றில் திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல  இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று   இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து கருத்துக்களை வெளியிட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, நாட்டின் அரசியல் பின்னணி, நிர்வாகம் மற்றும் அத்தகைய நடவடிக்கையின் அவசியம் ஆகியவற்றை மதிப்பீடு செய்த பின்னர் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளும் இத்தகைய கட்டாய இராணுவப் பயிற்சி முறையை வழங்குவதாகவும்  தெரிவித்த கெஹெலிய ரம்புக்வெல்ல, இந்த விடயத்துடன் இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்றார்.

Exit mobile version