இலங்கையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று? சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 130 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் உண்மைத் தகவல்களை விட பொய்யான தகவல்களே மக்களிடம் செல்வதாகவும் அவை தவிர்க்கப்பட வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சில குறுகிய நோக்கங்களுக்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், மக்கள் வதந்திகளை நம்பாது செயற்படுமாறும் சுகாதார அமைச்சர் சார்பில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இது குறித்த அவசரமான நிலைமைகளில் மக்களுக்கு உடனடி அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொடர்பில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமைகள் ஏற்படுமானால் சுகாதார அமைச்சு அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கும் என்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.

இலங்கையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 130 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டவர் ஐ. டி. எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர்கள் தியத்தலாவையில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது