இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள்- நாளை முதல் மக்களுக்கு போடும் பணி ஆரம்பம்

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தடுப்பூசிகள், எயார் இந்தியா விமானம்  மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவால் தயாரிக்கப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக இலங்கை அரசாங்கத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

EszJreaXIAYnM8L இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள்- நாளை முதல் மக்களுக்கு போடும் பணி ஆரம்பம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் நாளை முதல் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆறு வைத்தியசாலையில் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த வைத்தியசாலைகளில் சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு திட்டத்தின் தொடக்கத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.