இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் மற்றும் ஆமை

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.32 அடி நீளமான குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்.

தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

pearlonenews கரை ஒதுங்கிய திமிங்கலம்

அதே நேரம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில்   உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் ஆமையின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.

IMG 20210615 075057 Bokeh இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் மற்றும் ஆமை

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் வடக்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.