இரண்டு பில்லியன் டொலர்களை இலங்கை இழக்கும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் இலங்கை அரசு 2 பில்லியன் டொலர்களை இழக்கும் என இலங்கை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா நேற்று (23) இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே நாம் அதனை தக்கவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் திறந்த பொருளாதார சந்தை வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கான சரியான பொறிமுறை எம்மிடம் இல்லை.

ஆடை ஏற்றுமதி மூலம் 6.1 பில்லியன் டொலர்களை அரசு இந்த வருடம் வருமானமாக பெற்றுள்ளது. அதில் 2 பில்லியன் டொலர்கள் இந்த வருடத்தின் முதல் 3 மாத காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானம். ஆடை உற்பத்தி தொழிலில் 4 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.