இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் – 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் 55% வாக்குகளைப் பெற்ற ஜோகோ விவோடோ ஜனாதிபதி பதவிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து எதிர்தரப்பினர் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பிரபுவோ சுபியோவின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஜோகோவை ஜனாதிபதியாக நியமித்த பின்னர், ஜகார்த்தா முழுவதும் இரண்டாவது நாளான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர்.

தலைநகரில் போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதுடன் 20,000 க்கும் அதிகமான காவல் துறையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.18b303d3ac1043d886ed49432b5a7ff4 18 இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் - 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.