Tamil News
Home செய்திகள் இந்திய அரசு தொடர்ந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றது

இந்திய அரசு தொடர்ந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றது

இஸ்ரேலிய தயாரிப்பான பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்திய அரசு ஊடகவியலாளாகளையும், செயற்பாட்டளர்களையும் தொடர்ந்து கண்காணித்து அச்சுறுத்திவருவதாக வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த வியாழக்கிழமை(27) என தெரிவித்துள்ளது.

முன்னர் இந்திய அரசு கண்காணித்த ஊடகவியலாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் அது மீண்டும் கண்காணித்துவருகின்றது. என்.எஸ்.ஓ என்ற இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்த இந்த மொன்பொருளை பயன்படுத்தி தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, அதில் உள்ள தகவல்களை திருடுவது, மின்னஞ்சல்களை திருடுவது, நபர்களின் நகர்வுகளை பின்தொடர்வது போன்றவற்றை இந்தியா செய்து வருகின்றது.

வயர் என்ற இலத்திரனியல் ஊடகத்தில் பணியாற்றிய சித்தார்த் வரதராஜன் என்ற ஊடகவியலாளர் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் ஊழல் தொடர்பில் பணியாற்றிய ஊடகவியாலாளர் ஆனந் மங்கேலெ ஆகியோர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் அப்பிள் தொலைபேசிக்குள் இந்த மென்பொருட்கள் ஊடுருவியது கடந்த ஒக்டோபர் கண்டறியப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக இந்திய அரசு கண்பாணிப்புக்களை மேற்கொண்டுவருவதாகவும், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலார்களை துன்புறுத்துவதாகவும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் டொன்சா ஒ சேர்பாகில் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version