Home செய்திகள் இந்தியா, அமெரிக்காவை மையப்படுத்தி சுதந்திரக் கட்சியில் சதி – மைத்திரியும் சிக்கியுள்ளாராம்

இந்தியா, அமெரிக்காவை மையப்படுத்தி சுதந்திரக் கட்சியில் சதி – மைத்திரியும் சிக்கியுள்ளாராம்

Maiththiripala Sirisena இந்தியா, அமெரிக்காவை மையப்படுத்தி சுதந்திரக் கட்சியில் சதி - மைத்திரியும் சிக்கியுள்ளாராம்இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதான சதித் திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சதியில் சிக்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சதியின் அடிப்படையிலேயே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதாகவும் இதன் விளைவாக தற்போது கட்சியின் அதிகாரம் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சியை காண முடியாத ஒரு குழுவினரிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தி இந்த சதி நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்கு
மூலத்தை பதிவு செய்துள்ள அவர், தாய்லாந்துக்கு சென்றாா்.

மேலும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவியில் தொடருவதற்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சிக்குத் தலைமைத்துவம் இல்லாத நிலையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது.

அதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சித் தலைவருக்கு அத்தகைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் இருப்பதால், அரசியல் குழு கூட்டத்தை கூட்ட முடியாது என்று கூறியது. இதனால் அரசியல் குழு கூட்டமும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட
நியமனங்களும் சட்டவிரோதமானது எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பினர் கூறிவருகின்றனர்.

Exit mobile version