Tamil News
Home செய்திகள் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை குறித்து அரசு உரிய ஆலோசனைகளை நடத்தவில்லை – சரத் வீரசேகர

இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை குறித்து அரசு உரிய ஆலோசனைகளை நடத்தவில்லை – சரத் வீரசேகர

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கம் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

மார்ச் மாத இறுதிக்குள் இந்தியாவுடனான உத்தேச பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கை குறித்த தொழில் நுட்ப பேச்சுக்களை இறுதி செய்வது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு சரத் வீரசேகர எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் பாராளுமன்றக் குழுவினருடன் அரசாங்கம் ஆராயவில்லை. இது குறித்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. உரிய கலந்தாலோசனைகளை மேற்கொள்ளாமல் இறுதி உடன்படிக்கை குறித்த தீர்மானத்தை எடுக்க முடியாது.

எக்டா உடன்பாடு குறித்து ஆளும் பொதுஜன பெரமுன தனது நிலைப்பாட்டை தாமதமின்றி வெளிப்படுத்தவேண்டும். நாட்டில் காணப்படும் அரசியல் சமூக சூழ்நிலைகளை தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி பயன்படுத்தக்கூடாது.

2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய முன்னொருபோதும் இல்லாத உதவியை இலங்கை பாராட்டுகின்றது. எனினும் நெருக்கடியில் ஒரு நாடு சிக்குண்டுள்ள வேளை அதன் மூலம் பலன்பெற முயலக்கூடாது” என்றும் சரத் வீரசேகர தெரிவித்தாா்.

Exit mobile version