இந்தியாவுக்கு இலஞ்சம் கொடுங்கள் – ஆலோசனை வழங்குகின்றது ஐ.தே.க

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பகுதி கொள்கலன் கையாளும் பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதன் மூலம் பல நாடுகளின் ஆதரவுகளை பெற்று சிறீலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் முன்வைக்கப்படும் தீர்மானத்தை முறியடிக்கலாம் என தற்போதைய அரசுக்கு ஆலோசனை வழங்குகின்றது ஐக்கிய தேசியக் கட்சி.

இது தொடர்பில் ஐ.தே.காவின் பிரதித் தலைவர் றுவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளதாவது:

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பகுதி கொள்கலன் கையாளும் பகுதியே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவை முறியடிக்கும் ஆயுதம்.

இதனை நான் இலஞ்சம் கொடுங்கள் என்று கூறவில்லை ஆனால் இதனை இந்தியாவுக்கு வழங்கினால் இந்தியா மூலம் பல நாடுகளின் ஆதரவுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திரட்டி நாம் அவர்களின் தீர்மானத்தை முறியடிக்க முடியும்.

எமது அரசு பல அரச சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கூறினார்கள் ஆனால் தற்போதைய அரசும் அதனை தான் செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.