Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்க செளதி அரேபியா முயற்சிப்பதாக அந்நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் ஆடில் அல்-ஜூபேர்  தெரிவித்துள்ளார்.

அரப் நியூஸ் ஊடகத்திற்கு ஜூபேர் அளித்த பேட்டியில் ஒன்றில், பிராந்தியம் முழுவதிலும் அமைதியை செளதி அரேபியா விரும்புகிறது. அதற்காக பல மட்டங்களில் முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,   “நாங்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்குத் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். அது இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான அமைதியானாலும் சரி, லெபனான், சிரியா, இராக், இரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைதியானாலும் சரி, அதற்காக நாங்கள் முழுமையாக முயற்சி செய்கிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கவும் நாங்கள் முயற்சிக்கிறோம். சூடானில் ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதானாலும் லிபியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதானாலும் நாங்கள் எல்லா விவகாரங்களிலும் நேர்மறைப் பங்களிப்பை ஆற்றி வருகிறோம்” என்றார்.

நன்றி -பிபிசி

Exit mobile version