Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெறுவுள்ளதாக அறிவிப்பு

இந்தியாவில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெறுவுள்ளதாக அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக  தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் குறைந்தது மூன்று இடங்களில் இந்த  ஒத்திகை நடத்தப்படும் என்றும் சில மாநிலங்களில் கடினமான பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண், மாநிலங்களின் முதன்மை செயலர்கள், தேசிய சுகாதார இயக்க அதிகாரிகள் மற்றும் மாநில சுகாதாரத்துறையின் அதிகாரிகளுடன் காணொளி மாநாடு நடத்தியதாகவும், இதற்கான ஆயத்தங்களின் நிலை பற்றி மறு ஆய்வு செய்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒத்திகையின் நோக்கம், திட்டமிடல் மற்றும் தடுப்பூசி போடும் செயல்முறைக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். இது களத்தில் பணிபுரியும் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். அத்தோடு இந்தியாவில் இதுவரை எந்த தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஒத்திகையின் நோக்கம் யாருக்கும் தடுப்பூசி கொடுப்பதில்லை. தடுப்பூசி வரும்போது, இந்த செயல்முறை சரியாக வேலை செய்யுமா இல்லையா, என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்வதே என்று மத்திய அரசு கூறியுள்ளது.

முன்னதாக இந்தியா முழுவதும் ஒரு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி இயக்கம் நடந்தது. அப்போது 9 மாதங்கள் முதல் 10 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர்களின் எண்ணிக்கை, இந்திய மொத்த மக்கள்தொகையில் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version