Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் கொரோனாவால் 1,45,136 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் 1,45,136 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதே நேரம் 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர்.  

கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளதாக மத்திய அரசு கூறி உள்ளது.

மேலும்  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,153 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியை கடந்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.40 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,08,751ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 12வது நாளாக கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 இலட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸால் நேற்று மட்டும் 347 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,45,136 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7-ம் திகதி  கொரோனா பாதிப்பு 20 இலட்சத்தையும், 23-ம் திகதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் திகதி 40 இலட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் திகதி 50 இலட்சத்தையும், 28-ம் திகதி 60 இலட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 இலட்சத்தையும் தொட்டது. 29-ம் திகதி 80 இலட்சத்தையும், நவம்பர் 20-ம் திகதி 90 இலட்சத்தையும் கடந்துள்ளது”. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version