இந்தியர்களை பாதித்த டிரம்ப் அரசாங்கத்தின் H-1B விசா கட்டுப்பாடு: ரத்து செய்த நீதிமன்றம்

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்த H- 1B விசா கட்டுப்பாடுகள் திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை பாதிக்கும் விதமாக அமைந்திருந்த நிலையில் அக்கட்டுப்பாடுகளை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல எண்ணும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு இது சாதகமான தீர்ப்பாக அமையும் எனக் கருதப்படுகின்றது.
அமெரிக்க அரசு ஆண்டுதோறும் 85 ஆயிரம் H-1B விசாக்களை வழங்கும் நிலையில், இந்த விசாக்களை வைத்துள்ள ஒட்டுமொத்த எண்ணிக்கையில் இந்தியர்கள் 70 சதவீத பங்கைக் கொண்டிருக்கின்றனர்.