Tamil News
Home செய்திகள் இணையவளி பாதுகாப்பு சட்டம் ஆபத்தானது – அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு

இணையவளி பாதுகாப்பு சட்டம் ஆபத்தானது – அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கடந்த மாதம் கொண்டுவந்த இணையவளி பாதுகாப்பு சட்டமூலம் மக்களின் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரங்களை இல்லாது செய்வதுடன், ஜனநாயகத்தை மேலும் தரமிறக்கும் நடவடிக்கையாகும் என ஜெனீவாவை தளமாகக் கொண்ட அனைத்துலக நீதிபதிகள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை (29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய சட்டமூலம் கடந்த 18 ஆம் நாள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது இணையவளி தொடர்பாடல்களில் உள்ள தகவல்களை கட்டுப்படுத்தும் திட்டமாகும். பொதுமக்களின் கருத்துக்களும் இதன்மூலம் தடை செய்யப்படும். இது அடிப்படை உரிமை-களை மீறுவதுடன், மனித உரிமை மீறலுமாகும். பொதுமக்களின் கருத்துச் சுதந்திரமும் பறிக்கப்படும்.

முழு அதிகாரமும் அரச தலைவரிடம் இருப்பதால் அது ஆபத்தான சட்டமாகும். இதனை பயன்படுத்தி அரசு அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version